WATCH
in the news
மேல்முறையீட்டு முறையில் துரிதம், எளிமை, சிக்கனம்
10 April 2019
இணையப் பொய்ச் செய்தி, இணையத்தைத் தவறாகப் பயன் படுத்துவதற்கு எதிரான பாதுகாப் புச் சட்டம் தொடர்பில் விதிக்கப் படும் ஆணைக்கு எதிராகத் தனி நபரோ அமைப்போ எளிமையாகவும் விரைவாகவும் சிக்கனமாகவும் மேல்முறையீடு செய்யும் சூழல் தேவை என்று நேற்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கூறினார்.
நாடாளுமன்றத்தில் இம்மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய் யப்பட்ட அச்சுறுத்தலிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் சட்டத்திற் கும் இதே நடைமுறையைக் கொண்டு வர எண்ணுவதாகவும் நேற்று முஸ்லிம் வழக்கறிஞர் கழகம், ‘வைஸ் எஸ்ஜி’ அமைப்பு ஆகிய வற்றின் ஏற்பாட்டில் நடந்த கலந் துரையாடலின்போது தெரிவித்தார்.
ஏற்கெனவே அச் சுறுத்தலிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் சட்டம் நடப்பில் இருந் தாலும் அதைச் செயல்படுத்தும் முறை இன்னும் விரைவாகவும் சிக்கனமாகவும் அமையலாம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.