WATCH
in the news
பொய்த் தகவல்கள் தொடர்பிலான சட்டத்தில் மேலும் விளக்கங்கள் சேர்க்கப்படும்: சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம்
Vasantham Seithi
9 February 2019
இணையத்தில் பரப்பப்படும் பொய்த் தகவல்கள் தொடர்பிலான சட்டத்தில் மேலும் பல விளக்கங்கள் சேர்க்கப்படும் என சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
பொய்த் தகவல்கள் என்றால் என்ன என்பதைத் தெளிவாக விளக்குவது அதன் நோக்கம் என்று அவர் சொன்னார்.
"வெறுப்பைத் தூண்டும் பேச்சு, வேண்டுமென்றே பொய்த் தகவல்களைப் பரப்பும் போக்கு" ஆகியவற்றின் தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் திரு. சண்முகம் பேசினார்.
சமயத் தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என 160 பேர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் திரு. சண்முகம் பதிலளித்தார்.
WhatsApp, Telegram போன்ற செயலிகளில் குறுஞ்செய்திகள் மூலம் பல பொய்த் தகவல்கள் பகிரப்படும் நிலையில், அத்தகைய தொழில்நுட்பச் சவால்களைச் சிங்கப்பூர் எப்படிச் சமாளித்து வருகிறது என்று கேட்கப்பட்டது.
இணையத்தில் பொய்ச் செய்திகள் பரப்பப்படும் பிரச்சினைக்குச் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துவது உடனடித் தீர்வாகாது என்றாலும் அது நல்ல தொடக்கமாக இருக்கும் என்றார் திரு. சண்முகம்.